தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாலவாடி ஊராட்சி, கூரம்பட்டி கிராமத்தில் ரூ.9.97 இலட்சம் மதிப்பிட்டில் தானியகிடங்கு அமைக்கும் பணியினையும், பாலவாடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டு வருவதையும், இதே ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.47.00 இலட்சம் மதிப்பீட்டில் முனியப்பன் கோவில் முதல் பாலவாடி ஏரி வரை கால்வாய் ஆழப்படுத்தி அகலப்படுத்துதல் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும், இண்டூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி திட்டத்தின் கீழ் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் அமைக்கும் பணியினையும், பேடறஅள்ளி ஊராட்சி, பூச்செட்டிஅள்ளி கிராமத்தில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இப்பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலஅளவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இந்த ஆய்வின்போது, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கே.சர்வோத்தமன், உதவி பொறியாளர் திருமதி.சுமதி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக