தருமபுரியில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக கடந்த நான்கு வருடங்களாக தருமபுரி அரசு மருத்துவமனை நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு தினந்தோறும் மதியம் மற்றும் மாலை வேளையில் 500 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
இன்று தருமபுரி இலக்கியம்பட்டி தொப்பி வாப்பா பிரியாணி கடையின் DANCING CHEF என்று அழைக்கப்படும் திரு.சப்தகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 500 நபர்களுக்கு மதிய உணவு வழங்கினார். இந்த நிகழ்வை மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், உணவு ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, அருணாசலம், சையது ஜாபர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக