தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அடுத்த பூவன் கொட்டாய் கிராமத்தில் சாக்கடை கால்வாயை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வாரி சாலையின் நடுவே போட்டதால் பொதுமக்கள், மாணவர்கள் என அவ்வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பேளாரஅள்ளி பஞ்சாயத்து மூலம் செய்யப்பட வேண்டிய பணிகளை திமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜன் அராஜாகமாக இப்பணிகளை செய்து வருகிறார்.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேட்டால் அநாகரீகமான வார்த்தைகளால் பேசுவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக பூவன் கொட்டாய் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக