தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள செங்கன்பசுவந்தாவ் ஏரி, ஜெர்தலாவ் ஏரி, பூவன் கொட்டாய், தாமரை ஏரி, புலிக்கல் ஏரி வழியாக தும்பலஅள்ளி அணையை சென்றடைகின்றது. கடந்த 7-ம் தேதி சின்னாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் நீர் வழிக்கால்வாய்கள் பொதுப்பணித் துறையால் தூர் வாரப்படாததால், கால்வாய் முழுவதும் செடி கொடிகள் முளைத்தும், குப்பைகளால் நிரம்பியும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது.
பொது பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தினால் கிராம மக்களே தங்களது சொந்த செலவில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கால்வாய்களை தூர்வாரி வருகின்றனர்.தமிழக அரசு செய்ய வேண்டிய பணியை ஊர் பொதுமக்களே செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக