TNPSC-GROUP-IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, எப்படி இணைவது? முழு விவரம்.. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 டிசம்பர், 2024

TNPSC-GROUP-IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, எப்படி இணைவது? முழு விவரம்..


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வனக் காப்பாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்வானது 13.07.2025 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் கீழ், தேர்வர்கள் தயாராகும் பொருட்டு TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 27.12.2024 முதல் தொடங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. 


மேலும் சிறுதேர்வுகள் மற்றும் முழு மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வலுவலகத்தில் பள்ளிப் பாடபுத்தகங்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச Wi-Fi மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதிகள் போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன. 


எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://t.ly/42Phb இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இவ்வலுவலக தொலைபேசி எண் 04342–288890 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad