தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் 100 வது பிறந்த நாள் விழா மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு, நகர தலைவர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் பெரியண்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ராஜாராம், நந்தகிரி, ஜெய்கணேஷ், நகர துணைத் தலைவர் ராமரு, நகர பொருளாளர் முனியப்பன், விவசாய அணி ஒன்றிய தலைவர் பரந்தராமன் மற்றும் நகர நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக