தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சொக்கன்கொடாய் கிராமத்தில் இரவு முள்புதரில் இருந்து ஊருக்குள் நுழைய முயன்ற மலை பாம்பை பார்த்த அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த பாலக்கோடு வனத்துறையினர் 12அடி நீளமுள்ள மலைப்பாம்பை இலாவகமாக உயிருடன் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். அவ்வப்போது இறை தேடி கிராமங்களுக்குள் மலைப்பாம்புகள் வருவதால் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக