இளம் தலைமுறையினர் வாக்களிப்பதை ஒரு முக்கிய நிகழ்வாக கொண்டு வாக்கினை செலுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

இளம் தலைமுறையினர் வாக்களிப்பதை ஒரு முக்கிய நிகழ்வாக கொண்டு வாக்கினை செலுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.


15-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தருமபுரி அரசு கலை கல்லூரி கலை அரங்கத்தில், தேர்தல் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என 21 நபர்களுக்கு ரூ.33 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பரிசு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 15-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களுடன் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 15-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களுடன் இன்று (25.01.2024) தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு, தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். பின்னர், வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.


இப்பேரணியில் சுமார் 200-க்கு மேற்பட்ட தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்துகொண்டு, இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி தருமபுரி அரசு கலைக்கல்லூரி வரை சென்று முடிவடைந்தது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கத்தில், 15-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களிடையே நடைபெற்ற சுவர் இதழ் வரையும் போட்டி, கட்டுரை எழுதுதல் போட்டி, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான வண்ணக் கோலப்போட்டிகள் ஆகிய பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 21 நபர்களுக்கு ரூ.33 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பரிசு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணிகளை மேற்கொண்ட 14 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை பாராட்டி நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். 15-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தேசிய வாக்காளர் தினம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.


மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 25-ஐ தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் வகையில் 2011 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 15-வது தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகதியாக இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும், 907 வாக்குசாவடி மையங்களிலும் மற்றும் மாவட்ட அளவில் இயங்கும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


மாணவ மாணவியர்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுபுறத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துரைத்து அவர்களை ஜனநாயக கடமையாற்ற உதவவேண்டும். இன்றைய இளம் வாக்காளர்களே எதிர்காலத்தில் நாட்டின் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்ற இருப்பதால் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்து எதிர் வரும் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும். தருமபுரி மாவட்டம் கடந்த நான்கு தேர்தல்களிலும் அதிக வாக்குப்பதிவு சதவீதத்தில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்ற மாவட்டம் ஆகும். 


கடந்த 2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 82% பெற்று முதலிடம் பெற்றது. இருப்பினும், 100% வாக்குப்பதிவு இருக்க வேண்டுமென்பதே தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் இலக்காகும். இதற்காக அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இளம் தலைமுறையினர் என் வாக்கு என் உரிமை என்பதை உணர்ந்து வாக்களிப்பதை ஒரு முக்கிய நிகழ்வாக கருதி வாக்கினை செலுத்த வேண்டும். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைவருக்கும் வழங்கப்பட்ட உரிமையாகும்.


இதனை நாம் சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை மேலோங்க செய்ய முடியும் எனவே அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், புதிய வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


முன்னதாக 15-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கத்தில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அசோக்குமார், தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் திரு.கண்ணன் உட்பட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டார்கள். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad