மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 220 பேருக்கு 51.50 லட்சம் ரூபாய் அபராதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஜனவரி, 2025

மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 220 பேருக்கு 51.50 லட்சம் ரூபாய் அபராதம்.


தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 220 பேருக்கு, 51.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தெரிவித்தார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க, மாவட்ட கலெக்டர் சாந்தி ஆலோசனைப்படி, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசார் இணைந்து, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கபட்டால், அவர்களுக்கு முதல்முறை, 25 ஆயிரம், 2 வது முறை, 50 ஆயிரம், மீண்டும் தொடர்ந்து விற்பனை செய்தால், ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.



மேலும், கடைக்கு சீல் வைத்து, குறிப்பிட்ட நாட்கள் வரை கடை இயங்க தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், கடந்த, 2023 நவ., முதல், 2024 டிச., 31 வரை புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 220 பேருக்கு, 51.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 பேர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad