இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தின் மாதாந்திர தேவை 930 மெட்ரிக் டன் எனவும், இதற்காக ராகி சிறு தானியத்தை சிறு /குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ராகி அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள கீழ்காணும் வட்டங்களில் ஜனவரி-2025 வரையில் ராகி சிறுதானிய நேரடி கொள்முதல் நிலையம் திறந்து செய்லபட அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி-2025 முதல் ஆகஸ்ட்-2025 வரை ராகி கொள்முதல் செய்ய காலநீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி வட்டம் |
தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் திருப்பத்தூர் மெயின்ரோடு, மதிகோண்பாளையம் , தருமபுரி வட்டம்- 635701 |
பொன்னாகரம் வட்டம் |
பென்னாகரம் வட்ட, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிட வளாகம் வண்ணாத்திப்பட்டி, -636 813 |
அரூர் வட்டம் |
அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அரசு மருத்துவமனை எதிரில் தருமபுரி மெயின்ரோடு, அரூர் வட்டம் -604 408 |
சிறு/குறு விவசாயகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த ராகியை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஒளி நகல்கள் (Xerox Copies) உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். விற்பனைக்கு கொண்டுவரும் ராகி சிறுதானியத்தை கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கம் செய்து தரம் பிரித்துக்கொண்டு வரவேண்டும். மேலும், அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4290/- (கிலோ 1-க்கு ரூ.42.90 ) என்ற அடிப்படையில் தங்களது வங்கி கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு செலுத்தப்படும்.
தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பினை ராகி சாகுபடி செய்த சிறு /குறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவும், மேலும், நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் கீழ்கண்ட தொடர்பு எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
மண்டல மேலாளர் அலைபேசி எண் |
9443938003 |
மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் |
04342-231345 |
விழிப்பு
பணி அலுவலர்
தொலைபேசி எண் |
044-26424560 |
பொது மேலாளர்
(சந்தை)
அலுவலக தொலைபேசி
எண் |
044-26422448 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக