நல்லாம்பட்டி கிராமத்தில் விவசாய கிணற்றில் 3 காட்டெருமைகள் விழுந்து தவிப்பு - மீட்பு பணியில் வனத்துறையினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

நல்லாம்பட்டி கிராமத்தில் விவசாய கிணற்றில் 3 காட்டெருமைகள் விழுந்து தவிப்பு - மீட்பு பணியில் வனத்துறையினர்.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு அத்திமுட்லு காப்பு காடு,  மொரப்பூர் காப்புக் காடு உள்ளிட்ட  வனபகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும், விளை நிலங்களை சேதப்படுத்துவது சில நேரங்களில் மின் வேலிகளில் சிக்கியும், கிணற்றில் விழுந்து உயிரிழப்பதும் நடைபெற்று வருகிறது. 


ஊருக்குள் வரும் வன விலங்குகளை வனத்துறையினர் அவ்வப்போது பட்டாசு வெடித்து மீண்டும்  வன பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரண்டஅள்ளி அடுத்த ஈச்சம்பள்ளம் கிராமத்தில் 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்த அட்டகாசம் செய்த நிலையில் வனத்துறையினர் அதனை ஈச்சம்பள்ளம் காப்புக் காட்டிற்க்கு விரட்டி அடித்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை விடியற்காலை மாரண்டஅள்ளி அடுத்த நல்லாம்பட்டியில் உள்ள  சிவன்  என்பவரின் 30 அடி ஆழமும்,  12 அடி தண்ணீர் கொண்ட விவசாய கிணற்றில் 3லிருந்து 5 வயது மதிக்கதக்க 3 காட்டெருமைகள் விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டு  உயிருக்கு போராடியது, கிணற்றில் இருந்து சத்தம் வருவதை அறிந்த அப்பகுதியினர் அருகே சென்று பார்த்த போது 3 காட்டெருமைகள் தண்ணீரில் உயிருக்கு  போரடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.


இது குறித்து பாலக்கோடு வனத்துறை மற்றும் தீயனைப்பு துறையினதகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறை மற்றும் தீயனைப்பு துறையினர் ஜே.சி.பி.மூலம் கிணற்றின் பக்கவாட்டில் மண்ணை அள்ளி சாய்வு தளம் அமைத்து காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியல் பாபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad