காரிமங்கலம் எண்டம்பட்டி கிராமத்தில் இந்துஅறநிலை துறைக்கு சொந்தமான 41 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஜனவரி, 2025

காரிமங்கலம் எண்டம்பட்டி கிராமத்தில் இந்துஅறநிலை துறைக்கு சொந்தமான 41 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம், எலுமிச்சன அள்ளி, ஊராட்சி, எண்டம்பட்டி கிராமத்தில் 41 ஏக்கர் விவசாய நிலத்தை மீட்ட  அறநிலையத்துறை ஆய்வாளர்  துரை அவர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். 


காரிமங்கலம் அறநிலைத்துறை ஆய்வாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள துரை அவர்கள் இதற்கு முன்பு பாலக்கோடு அறநிலை துறை ஆய்வாளராக பணியாற்றி வந்த காலகட்டத்தில் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் நிலத்தை மீட்டு பொது ஏலம் விடப்பட்டு விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைத்து அரசுக்கு வருவாய் ஏற்படுத்திக் கொடுத்தார்.


அதன் காரணமாக ஆணையர் நல பொது நிதியிலிருந்து சுமார் 10 கோடி ரூபாய் நிதியாக பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது காரிமங்கலம் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில்  எலுமிச்சன அள்ளி ஊராட்சி எண்டம்பட்டி கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 41  ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்தது பெயர் பலகை வைத்துள்ளார்.


மேலும் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இந்து அறநிலை துறைக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்களுக்கு நீண்ட காலமாக வாடகை, நிலுவைத்தொகையை செலுத்தாமல் உள்ளவர்களுக்கு, நிலுவை தொகையினை செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து காரிமங்கலம் வட்டத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என ஆய்வாளர் துரை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad