மேலும், சிறப்பாக பணியாற்றிய 136 அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும், 51 காவலர்களுக்கு பதக்கங்களையும், பல்வேறு துறைகளின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.5.8 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 76-வது குடியரசு தினவிழா-2025 இன்று (26.01.2025) நடைபெற்றது. இந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர், வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார்கள்.
இவ்விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து, காவல்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 51 காவலர்களுக்கு 2025 -ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவ கல்வித்துறை, பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உணவு பாதுகாப்புத் துறை, ஆவின் துறை, வனத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், பள்ளி கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வோளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, கால்நடை பாரமரிப்புத்துறை, மீன்வாளம் மற்றும் மீனவர் நலத் துறை, தோட்டகலைத் துறை, நெடுஞ்சாலைத்துறை, ஆவின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், பொதுப்பணித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில்மையம், நூலகத்துறை, நேரு யுக கேந்திரா, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சிறப்பான முறையில் குழுவாக ஒருங்கிணைந்து பணிபுரிந்த குழுக்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறை சார்ந்த மொத்தம் 136 நபர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இளைஞர் நலன் மற்றம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் 11 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.35,000/- மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, வருவாய்த்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.5.45 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் இயற்கை மரண உதவித்தொகைகளும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.5.8 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இதனைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற 76-வது குடியரசுதின விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கப்பலேறி போயாச்சு.. தேச பக்தி பாடலும், கிராமியக்குழு நடனம், நாம் வாழும் பூமிக்கு வணக்கம் விழிப்புணர்வு பாடலும், தோம் தோம் தனை ஹிந்தி பாடலும், சிலம்பம் மற்றும் தற்காப்புக்கலை நிகழ்வு என பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர்கள் நிகழ்த்திய பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டு, பள்ளிகளுக்கு கேடயங்களையும் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுசான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கௌரவ்குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.செம்மலை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தருமபுரி நகரமன்ற தலைவர் திருமதி. மா.லட்சுமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.சாந்தி உட்பட மாவட்டத்தைச் சார்ந்த துறை தலைமை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலக பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக