தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி வளாகத்தில் நடைப்பெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து இந்திய விடுதலைக்காக போராடிய தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் தியாகங்களையும் நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் சரவணன், ரூஹித், சாதிக் பாஷா, மோகன், ஜெயந்திமோகன், வகாப் ஜான், திமுக கிளை செயலாளர்கள் கணேசன், மியான், படவட்டை, பள்ளி மாணவர்கள் அணைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார். பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அணைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக