கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவரும், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான தோழர் ந.நஞ்சப்பன் அவர்கள் கூட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் எம். மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சி.மாதையன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்ஏ காதர், வழக்கறிஞர் பவானி சிவராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பென்னாகரம் வட்டார பொறுப்பு செயலாளர் சதீஷ்குமார், வட்ட பொருளாளர் எம்.முத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் முனியப்பன், நகர துணை செயலாளர் இல. தர்மராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
இப்பேரவை கூட்டத்தில் 57 உறுப்பினர்கள் கொண்ட வட்டாரக்குழு தேர்வு செய்யபட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர், வட்டார தலைவராக சந்தோஷ், துணை தலைவர்களாக எம். முருகன், நாச்சானூர் ஆறுமுகம், வட்டார செயலாளராக சார்லஸ், துணைச் செயலாளர்களாக நாகனூர் பெரியசாமி, கார்த்திக் மற்றும் பொருளாளராக பெரியசாமி ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட பொறுப்பாளர் என்.என்.கதிரவன் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இந்த பேரவை கூட்டத்தில்,
- பென்னாகரத்தில் மகளிர் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும்,
- ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டையை உடனடியாக துவக்க வேண்டும்,
- பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்,செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் நவீன மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்,
- ஒகேனக்கல் முதல் தர்மபுரி வரை நான்கு வழி சாலை ஏற்படுத்த வேண்டும்,
- ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் தொடங்கி ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும்,
- ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்,
- பென்னாகரம் பேரூராட்சியை தரம் உயர்த்தி நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் தர்மபுரியில் ஜனவரி 26 இல் நடைபெறும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில மாநாட்டின் பேரணியில் பென்னாகரம் பகுதியில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகராஜ்,சண்முகம் உட்பட 90 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக