தமிழ் நாடு மாநில அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் மயிலாடுதுறையில் நடைபெற்றது, தமிழக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டு விளையாடினார்கள், அப்போட்டிகளில் தர்மபுரி மாவட்டம் சார்பாக கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் எஸ்.அமிர்தயாழினி, டீ.ஓவியா ஆகிய இரண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் அமிர்தயாழினி ஒற்றை கொம்பு வீச்சில் முதல் பரிசு பெற்று தங்க பதக்கத்தை வென்றார். இதனை தொடர்ந்து கடத்தூர் பேரூராட்சி தலைவர் கேஸ்.கு.மணி பள்ளிக்கு வருகை தந்து மாநில அளவில் வெற்றி பெற்று நம் மாவட்டத்திற்கும் கடத்தூருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவியை வெகுவாக பாராட்டி பணமுடிப்பை பரிசளித்தார்.
இதில் தலைமையாசியை முனைவர் அழகம்மாள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவியையும், உடற்கல்வி ஆசிரியர்கள் இராஜேந்திரன், தென்றல் ஆகியோரை பாராட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக