தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடம் B.துரிஞ்சிப்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது.இந்த சேவை மையக் கட்டிடத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
சேவை மையக் கட்டிடம் நுழைவாயில் அமைக்கப்பட்டிருக்கும் டைல்ஸ் அலுவலக ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிளும் மற்றும் இதற்கு முன்பு உள்ள கிணற்றில் தண்ணீர் இருந்தும் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்பட அபாயமும் சேவை மைய கட்டிடத்தை சுற்றி மனிதக் கழிவுகள் அதிக அளவில் இருப்பதால் இங்கு பணியாற்றும் அனைவருக்கும் எளிதில் தொற்று பரவும் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா! வட்டார வளர்ச்சித் துறை மற்றும் சுகாதாரத் துறை பொறுத்திருந்து பார்ப்போம்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக