இந்திய விமானப்படையில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பணிக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக 07.01.2025 அன்று முதல் 27.01.2025 வரை விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்றும், வருகின்ற 22.03.2025 அன்று இணைய வழியில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் இருபால் (ஆண்/பெண்) கல்லூரி மாணவர்கள் ஆகியோர் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக