அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.


தருமபுரி  மாவட்டம், அதியமான்கோட்டை சந்தில்பப்ளிக்பள்ளி அருகில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப.,அவர்கள் ,தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி, அவர்கள் முன்னிலையில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


தருமபுரி  மாவட்டம், அதியமான்கோட்டை சந்தில்பப்ளிக்பள்ளி அருகில்அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப.,அவர்கள், தருமபுரி நாடாளுமன்றஉறுப்பினர் திரு. ஆ.மணி, அவர்கள் முன்னிலையில் இன்று (05.01.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே உடற்தகுதிகலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 05.01.2025 அன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப்பிரிவு மூலமாக அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியிலிருந்து தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.பஅவர்கள் கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.


17 வயதுமுதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் 25 வயதிற்குமேற்பட்ட ஆண்களுக்கு செந்தில்பப்ளிக்பள்ளி, அதியமான்கோட்டையிலிருந்து தொடங்கி தேசிய நெடுஞ்சாலைவழியாக தடங்கம் மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தோக்கம்பட்டி வழியாக செந்தில்பப்ளிக்பள்ளி வந்தடையுமாறும், 17 வயதுமுதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான்கோட்டையிலிருந்து தோக்கம்பட்டி வழியாக தடங்கம் மேம்பாலம் வரைசென்று திரும்பி மீண்டும் அதே வழியாக செந்தில்பப்ளிக்பள்ளி வந்தடையுமாறும் நெடுந்தூர ஒட்டப்போட்டி நடைபெற்றது.


ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/-, நான்குமுதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்குதலாரூ.1000/-, மற்றும் தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்டவிளையாட்டு அலுவலர் திருமதி.சாந்தி உள்ளிட்ட தொடர்புடைய அலுவர்கள் உள்ளனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad