தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி நினைவு நாள் தொழுநோய் எதிர்ப்பு தினம் உறுதிமொழி விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி நினைவு நாள் தொழுநோய் எதிர்ப்பு தினம் உறுதிமொழி விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்.

மகாத்மா காந்தி நினைவு நாள்- தொழுநோய் எதிர்ப்பு தினம் - "ஸ்பர்ஷ்” தொழுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு, ஜனவரி 30-ம் தேதி அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக தொழுநோய் எதிர்ப்பு தினம் இருவார விழாவாக (30.01.2025 முதல் 15.02.2025 வரை) மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 


இதன் முக்கிய நிகழ்வாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. K. சாந்தி அவர்கள் தலைமையில் "ஒன்றிணைவோம்! தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! தவறான புரிதல் அகற்றுவோம்! நோய் பாதிப்புள்ளோர் அனைவரையும் குணப்படுத்துவோம்! என்ற நோக்குடன் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று, தொழுநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கி, தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். 


பேரணியில் தருமபுரி கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், பேரணியானது தொழுநோய் விழிப்புணர்வு பதாகைகளுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி இலக்கியம்பட்டி கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் தர்மபுரி கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மருத்துவர் கல்லூரி முதல்வர் அமுதவள்ளி, இணை இயக்குனர் நலப்பணி மருத்துவர் சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ஜெயந்தி, துளை இயக்குனர் தொழுநோய் மருத்துவர் புவனேஷ்வரி மற்றும் துணை இயக்குனர் காசநோய் மருத்துவர் பாலசுப்பிரமணியன். துணை இயக்குனர் குடும்ப நலம் தர்மபுரி நகராட்சி நகர கல ஆய்வாளர் லட்சுவன மற்றும் ஐ.எம்.ஏ இந்திய மருத்துவ சங்கம் முதல்வர் ஹரிகிருஷ்ணன், சந்திரசேகர், சிவகுமார் நன்றி உரை எச்ஐவி கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் உலகநாதன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad