பாலக்கோடு அடுத்த அல்லியூர் கிராமத்தில் வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

பாலக்கோடு அடுத்த அல்லியூர் கிராமத்தில் வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அல்லியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது. 57) விவசாயியான இவருடன் பிறந்தவர்கள் 2 அண்ணன் தம்பிகள் 3 பேருக்கும் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியினை கிருஷ்ணனின் தம்பி பாலகிருஷ்ணன் வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.


புதிய தேசிய நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ள இந்த இடத்தில்  கிருஷ்ணணுக்கு சொந்தமான நிலத்தையும்  வாங்கினால் பிளாட் போடலாம் என முடிவு செய்தவர்கள் கடந்த சில மாதங்களாக கிருஷ்ணனிடம் நிலத்தை விலைக்கு கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.


காலம் காலமாக விவசாயம் செய்து வந்த நிலத்தை விற்க மனதில்லாமல் மறுத்ததால் போலீசார் மற்றும் பாலக்கோடு தாசில்தார் ரஜினியின் ஆதரவுடன் இவரது வீட்டை சுற்றி சுமார் 100க்கும் மேற்பட்ட நொரம்பு கற்களை குவியல் குவியலாக கொட்டி வீட்டை விட்டு வெளியேறதாவறு செய்தனர்.


இதனால் விரக்தியடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அல்லியூர் நெடுஞ்சாலையில் மண்னென்னெய் ஊற்றி கொண்டு தீ குளிக்க முயன்றனர். தகவலறிந்த மதிகோன்பாளையம் போலீசார் விரைந்து வந்து தீ குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.


அதனை தொடர்ந்து கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உடனடியாக வீட்டின் வழியை மறைத்து கொட்டப்பட்டிருந்த கற்குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து தீ குளிக்கும் முயற்சியை கைவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad