நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (பேரூ.2) துறை அரசாணை நிலை எண்:205/31.12.2024-ன் படி வெங்கடசமுத்திரம் ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் சாக்கடை வசதி மற்றும் இதர அரசு திட்டங்கள் பேரூராட்சியில் இல்லாத காரணத்தால் இவை அனைத்தும் பறிபோகும்.
மேலும் வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி இனங்கள் சுமை அதிகரிக்கும். எனவே வெங்கடசமுத்திரம் ஊராட்சியினை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், பழைய நிலையிலேயே வெங்கடசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியாக தொடர்ந்து செயல்பட அரசு ஆவண செய்ய வேண்டி இன்று 03-01-2025 வெள்ளிக்கிழமை ஊராட்சிக்கு உட்பட்ட கடைகள் அனைத்தும் அடைத்தும், காலை 11.00 மணி அளவில் வெங்கடசமுத்திரம் பஸ்நிலையம் முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையில் பொதுமக்கள் பேரணியாக சென்று பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அவர்களிடம் மனுகொடுத்து பேரணியை நிறைவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக