தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கன்சால்பைல் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசோக் (வயது.38) இவர் காலை 8.30 மணியளவில் தனது ஆட்டோவில் காய்கறி மூட்டைகளை ஏற்றி கொண்டு கன்சால்பைல் கிராமத்தில் இருந்து பாலக்கோடு மார்கெட் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அந்தாளிக்கொட்டாய் தார் சாலை அருகே வரும் போது காட்டுபன்றி ஒன்று இவரது ஆட்டோவின் குறுக்கே வந்து மோதியது, இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஆட்டோ முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமானது, மேலும் அசோக்கிற்க்கு தலை, கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
காட்டு பன்றி லேசான காயங்களுடன் தப்பி காட்டிற்க்குள் சென்றது. அவ்வழியாக சென்றவர்கள் அசோக்கை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக