பழங்குடி மாணவர்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த கரடு முரடான பாதையில்‌ நான்கு கிலோ மீட்டர்‌ நடந்த மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

பழங்குடி மாணவர்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த கரடு முரடான பாதையில்‌ நான்கு கிலோ மீட்டர்‌ நடந்த மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌.


தர்மபுரி மாவட்டம்‌ பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில்‌,சேலம்‌ -தர்மபுரி மாவட்ட எல்லையில்‌, ஏற்காடு மலை அடிவாரத்தின்‌ பின்புறத்தில்‌ அமைந்துள்ளது, போதக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சியின்‌ வழியாக சென்றால்‌ சேலம்‌ மாவட்டம்‌ ஏற்காடு தாலுகாவுக்கு உட்பட்ட பெரிய ஏரிக்காடு நல்லூர்‌ உள்ளிட்ட பத்துக்கும்‌ மேற்பட்ட மலை கிராமங்கள்‌ அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களில்‌ இருந்து தர்மபுரி மாவட்டத்தில்‌ 300க்கும்‌ மேற்பட்ட மலைவாழ்‌ பழங்குடியின பள்ளி, கல்லூரி, மாணவிகள்‌ தங்கி பயின்று வருகின்றனர்‌.


இவர்கள்‌ சுமார்‌, 250 பேர்‌ மாவட்டத்தில்‌ பாப்பிரெட்டிப்பட்டி அரூர்‌, தர்மபுரி பகுதியில்‌ உள்ள அரசு மற்றும்‌ தனியார்‌ பள்ளிக்‌ கல்லூரிகளில்‌. விடுதிகளில்‌ தங்கி பயின்று வருகின்றனர்‌. இதில்‌ தர்மபுரி மாவட்டத்தில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ 40 மாணவ மாணவிகள்‌ தினந்தோறும்‌ மலை கிராமங்களில்‌ இருந்து சுமார்‌ 10 கி.மீ.,நடந்து வந்து படித்து செல்கின்றனர்‌.


தர்மபுரி மாவட்டத்தில்‌ சுமார்‌ 500 மீட்டர்‌ மலைப்பாதை அமைந்துள்ளது, சேலம்‌ மாவட்டத்தில்‌ சுமார்‌ 3 கிலோ மீட்டர்‌ தொலைவில்‌ இருந்து கரடு முரடான காட்டுப்பாதையில்‌ பள்ளி கல்லூரி மாணவர்கள்‌ தினமும்‌ நடந்து வந்து பயின்று திரும்ப செல்கின்றனர்‌. அந்த மலை கிராமங்களில்‌ இருந்து தர்மபுரி மாவட்ட எல்லையில்‌ அமைந்துள்ள போதகாடு ஊராட்சி வரை சாலை வசதியை ஏற்படுத்தித்‌ தர வேண்டும்‌ என கோரிக்கை விடுத்து வந்தனர்‌.


இதனை அறிந்த தர்மபுரி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கி.சாந்தி உள்ளிட்ட பல்வேறு துறையைச்‌ சார்ந்த உயர்‌ அதிகாரிகள்‌, நேற்று காலை பழங்குடியின மாணவர்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ விழிப்புணர்வு பயணம்‌ சென்றனர்‌. இந்த விழிப்புணர்வு பயணம்‌ போதகாடு ஊராட்சி மாரியம்மன்‌ கோவிலூரில்‌ இருந்து தொடங்கி சேலம்‌ மாவட்டம்‌ ஏற்காடு மலையில்‌ உள்ள பெரியேரிக்காடு வரை சுமார்‌ 4 கி.மீ., நடந்து சென்றனர்‌. வழியில்‌ உள்ள கிராமங்களில்‌ பழங்குடியினர்‌ மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்‌.


அப்போது மாணவர்களிடமும்‌ பெற்றோர்களிடமும்‌ மாவட்ட மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ சாந்தி, நீங்கள்‌ தினமும்‌ நடந்து வர தேவை இல்லை. உங்களுக்கான பள்ளி கல்லூரி விடுதிகளில்‌ உங்களுக்கு தங்க ஏற்பாடு செய்து தருகிறோம்‌ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்‌.


மேலும்‌ தொடர்ந்து தமிழக அமைச்சர்‌ , சேலம்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ உள்ளிட்டோரிடம்‌, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில்‌ சாலை அமைவதற்கான ஏற்பாடுகள்‌ செய்வதாகவும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ சாந்தி உறுதி அளித்தார்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad