பாலக்கோடு திரெளபதி அம்மன் கோவில் ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பந்த கால் நடும் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

பாலக்கோடு திரெளபதி அம்மன் கோவில் ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பந்த கால் நடும் விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் திருவிழாவினை 12 கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரும் இனைந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.


உள்ளுர், வெளியூர், மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்திற்க்கும் அதிகமாக பக்தர்கள் இத்திருவிழாவில்  கலந்து கொண்டு திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து ஸ்ரீபுதுர் மாரியம்மன் கோயில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று  பால்குடம், தீச்சட்டி, அலகு குத்துதல், சாமி வேடம் அணிந்து செல்லுதல், வாகனங்களை இழுத்தல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்வர்.


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு நடைபெறும் இத்திருவிழாவானது வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 14 ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் தர்மகர்த்தா இளங்கோ தலைமையில் நடைப்பெற்றது.


பந்தகால் கொம்பிற்க்கு மா இலை, பூந்தோரனம் கட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து பால் தீர்த்தம் இட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பந்த கால் நடப்பட்டது. இன்றிலிருந்து வரும் 15ம் நாள் பிப்ரவரி 10ம் தேதி திருவிழா முதல் 14 ம் தேதி வரை ஸ்ரீ புதுர் மாரியம்மன் திருவிழா நடைபெற உள்ளது.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முரளி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தொகுதி கிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் பி.கே.கிருஷ்ணன், ரவி, முருகேசன், கிரி, மோகன், பீமாசி ராஜா, மாதேஷ், ஞானம், இடும்பன், சரவணன், காமராஜ், மகேந்திரன், ராஜாமணி சரவணன், தர்மன், சந்தோஷ், குட்டி, முருகன், சிவராஜ், ராஜா, ஸ்ரீ புதுர் மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சங்கர், செயலாளர் சக்திவேல், பொருளாளர் சிலம்பு, குழந்தை  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad