பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, வெங்கடசமுத்திரம் மற்றும் அதிகாரப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதியில், சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.28.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக, சுகாதார வளாகம், நியாய விலைக் கடை கட்டிடம், ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணியை, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், அதிமுகவின் ஒன்றிய செயலாளர்கள், விஸ்வநாதன், சேகர், மாவட்ட துணை செயலாளர், ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர், நல்லதம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர்கள், பெரியக்கண்ணு, தமிழ்மணி, வஜ்ஜிரவேல், பேரூர் செயலாளர், தென்னரசு, மற்றும் கட்சி நிர்வாகிகள், அன்பு, செல்வம், தங்கராஜ், மனோகரன், ராஜேந்திரன், மற்றும் அனைத்து பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக