முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பரிசு கூப்பன்கள் குலுக்கல் நடைபெற்றது. இதில் பென்னாகரத்தைச் சேர்ந்த திருமதி பிரியங்கா சக்திவேல் முதல் பரிசான காரை வென்றார். இதேபோல் இரண்டாவது பரிசாக மோட்டார் சைக்கிள், மூன்றாவது பரிசாக பிரிட்ஜ், நான்காவது பரிசாக எல்.இ.டி. டி.வி., ஐந்தாவது பரிசாக சோபா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளுக்கான அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பரிசுகளை தமிழ்நாடு அரசு நகராட்சிகள் இணை ஆணையாளர் அசோகன், தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது, பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, ஆசிரியர் முத்துராஜ், வழக்கறிஞர் சிவராஜ், தி.மு.க. மாவட்டத் துணை செயலாளர் ரேணுகாதேவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிகளை, பட்டிமன்ற பேச்சாளர் ஆசிரியர் சௌந்தர் பாண்டியன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக