சர்க்கரை ஆலையில் சுமார் 58 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தர்மபுரி எம்.பி ஆ.மணி அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஜனவரி, 2025

சர்க்கரை ஆலையில் சுமார் 58 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தர்மபுரி எம்.பி ஆ.மணி அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.




தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஜெர்த்தலாவ் ஊராட்சியில் அமைந்துள்ள சர்க்கரை ஆலையின் உட்பகுதியில் விவசாயிகள் கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்கள் செல்ல இதுவரை இருந்த மண் சாலையை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர் இதனால் மழைக்காலங்களில் டிராக்டர்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு இருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் சுமார்  52 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் 1400  சதுர மீட்டர் பரப்பளவில் மண் சாலைக்கு பதில்  சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது 


இந் நிகழ்ச்சியில்  தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து  சாலை அமைக்கும் பணியை  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், வழக்கறிஞர் கோபால், இல.கிருஷ்ணன், ஒன்யலாளர் ரவி,  ஒன்றிய அவைத் தலைவர் இராஜாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், விவசாய அணி குமார், முன்னாள் துணை சேர்மன் நாகராஜன், மற்றும் அலுவலக மேலாளர் ரவீந்திரன், தொழிலாளர் நல அலுவலர் மகேந்திரன், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

Post Top Ad