பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓடை புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தரக்கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓடை புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தரக்கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் சிக்கமாரண்டஹள்ளி புதூர் கிராமத்தில் ஓடை பொறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி பிடிஓ, தாசில்தாரரை கண்டித்து விவசாய அணி மாவட்ட தலைவர்  மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மனித உரிமை துறை சதீஷ்குமார் மாவட்ட தலைவர் சிறுபான்மை பிரிவு முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிக்கமாரண்டஹள்ளி புதூர் கிராமத்தில் நீண்ட காலமாக ஓடை புறம்போக்கு பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று வரவும்,ஆடு மாடுகளை மேச்சலுக்கு கொண்டு செல்லவும் இந்த பாதை பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை வருவாய் துறை மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும் உடனடியாக வருவாய்த்துறையினர் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டு தர வேண்டும் என கோஷமிட்டனர்.


இந்த நிகழ்ச்சியில்  முனுசாமி,  அர்த்தநாரி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad