தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானம்- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் ரூ.15,000/- வழங்கவும், வாரிய நலப்பயன்களை உயர்த்திடவும், வீடு வழங்கவும், பதிவை எளிமைப்படுத்தவும் கோருதல், சங்கம் கட்டுமான தொழிலாளர் கோரிக்கைகளை முன்வைத்து தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோரிக்கைகள்:
- கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15,000/- (பதினைந்தாயிரம் ரூபாய்) வழங்க வேண்டும்.
- நலவாரிய நலப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும்.
- வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு சொந்தமாக இலவச வீடு கட்டித்தர வேண்டும்.
- வாரிய பதிவை எளிமைப்படுத்த வேண்டும்.
- 60 வயதான நாள்முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தெரிவித்தனர், ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் முருகன், தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், போக்குவரத்து சங்க செயலாளர் முருகன், நிர்வாகிகள் சிவராமன், முனியம்மாள், ராஜசேகர், ராணியப்பன், வெங்கடேஷ், வீரபாண்டி ராஜன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக