சிலை திருட்டு வழக்கில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடி கைது - காரிமங்கலம் போலீசார் நடவடிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

சிலை திருட்டு வழக்கில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடி கைது - காரிமங்கலம் போலீசார் நடவடிக்கை.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் கடந்த 19 வருடங்களுக்கு முன்னர்   கோயில்களில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


இந்த 8 பேரில் 4 பேர் உயிரிழந்த நிலையில்  மீதி நான்கு பேர் நீதிமன்ற உத்தரவின்படி பினையில் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நான்கு பேரில் ஒருவரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் முத்துலிங்கம் (50) என்பவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவானார், 


இதையடுத்து, கோயில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய முத்துலிங்கத்தின் மீது நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது, ஆனால் வெளிநாட்டிற்கு தப்பி சென்றவர் கடந்த 19 ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்தார், காரிமங்கலம் போலீசார் தொடர்ந்து அவரை பிடிக்க  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முத்துலிங்கம் வந்து இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காரிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போலீஸார் நேற்று விரைந்து சென்று  முத்துலிங்கத்தை மயிலாடுதுறை மணல்மேடு பகுதியில் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட முத்துலிங்கத்தை தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 19 வருடங்களாக நீதிமன்றத்திற்க்கும், போலீசாருக்கும் போக்கு காட்டிய முத்துலிங்கத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad