தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி அரூர்-தர்மபுரி சாலையில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது, இந்த கல்லுாரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லுாரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்தாண்டு அரூர் வனச்சரக அலுவலகத்தில் இருந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக