தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 1-வது வார்டு புதூர்மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த ஒரு ஆண்டுகளாக பழுதடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்கப்படாததால் அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தெருவுக்கு செல்லும் கழிவுநீர் கால்வாய் நடுவே பழுதடைந்து ஓட்டை விழுந்து உள்ளதால் சொகுசு கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் இல்லாததால் அடிக்கடி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகின்றது.
எனவே பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீர் கால்வாயை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக