புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் சாமி தரிசனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஜனவரி, 2025

புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் சாமி தரிசனம்.


புத்தாண்டு பிறப்பையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் 2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.


தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சாமிக்கு தங்கக் கவசம் சாற்றுதலும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. 


இதே போல் தர்மபுரி எஸ்.வி ரோடு சாலை விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது பின்னர் சாமி வெள்ளிக்கவச  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோன்று அருகில் உள்ள ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது.


இதேபோல் தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும் மகா தீபாரதனையும் நடைபெற்றது. நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், ஓம் சக்தி மாரியம்மன் கோவில் மற்றும் மகாலிங்கேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.


இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், எஸ்.வி. ரோடு சுப்பிரமணியசாமி கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், குப்பா கவுண்டர் தெரு பூவாடைக்காரி அம்மன் கோவில், பாரதிபுரம் விநாயகர் கோவில், ஹரிஹர நாதசாமி கோவில் தெருவில் உள்ள தாச ஆஞ்சநேயர் கோவில் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 


இதேபோன்று தர்மபுரி  ஆத்துமேட்டில் உள்ள ஸ்ரீ  நஞ்சுண்டேஸ்வரர் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


இதேபோன்று அதியமான்கோட்டை தட்சினகாசி காலபைரவர் கோவில், கெரகோடஅள்ளி ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் மற்றும் ஞானப் பிள்ளையார் கோவில், பாப்பாரப்பட்டி புதிய மற்றும் பழைய சிவசுப்பிரமணிய சாமி கோவில், வே.முத்தம்பட்டி ஆஞ்சநேய சாமி கோவில், தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


இதையொட்டி அனைத்து கோயில்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் புத்தாண்டு பிறப்பையொட்டி மாவட்டம் aமுழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad