தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேருராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி. மனோகரன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், செயல்அலுவலர் இந்துமதி, துணைத்தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாமியர் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். அதனை தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்களுக்கு ஓட்டப் பந்தயம் நடைப்பெற்றது, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், பாஜக மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பி.கே.சிவா, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள், தூய்மை காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக