தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மத்திய ஒன்றிய கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் முனியப்பன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் இல.கிருஷ்ணன், வக்கில் கோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் பட்டு அஜி சுல்லா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் கலந்து கொண்டு கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் வேட்டி சேலைகளை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுகவின் ஒன்றிய துணை செயலாளர்கள் அற்புதம்செந்தில், ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் குமார், மாவட்ட பிரதிநிதிகள் மணி, முருகன், முத்துசாமி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் குமரவேல், மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜேஸ்வரி, பொறியாளர் அணி துணைத் தலைவர் அழகுசிங்கம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தேவேந்திரன், மாவட்ட மீனவர் அணி துணைத் அமைப்பாளர் குமரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பத்தேகான், கார்த்திகேயன், சார்பு அணி நிர்வாகி நவ்சத், மற்றும் திமுக நிர்வாகிகள் தர்மன், முருகேசன், பைரவன், சிவசக்தி, ராமன், உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக