பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைப்பெற்றது. திரெளபதியம்மன் கோயில் முன்பிருந்து ஊர்வலமாக வந்த மாற்று திறனாளிகள் தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகையை ஆந்திரா அரசால் வழங்கபடுவது போன்று சாதாரண மாற்று திறனாளிகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாயும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், படுத்த படுக்கையாக உள்ள மாற்று திறனாளிகளுக்கு 15 ரூபாயாக உயர்த்தி வழங்கிடு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 மணி நேரம் மட்டுமே பணி செய்ய உத்தரவிடு, 8 மணி நேரம் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெறு, அனைவருக்கும் முழுமையாக 100 நாள் வேலை வழங்கப்படுவதை உறுதி செய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சிறை நிரப்பும் பேராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் தமிழக அரசிற்க்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மாலை 5 மணிக்கு விடுவித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் திம்மன், வட்ட பொருளாளர் கிருஷ்ணன், வட்ட துணைத் தலைவர் பழனி உள்ளிட் 200க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad