பென்னாகரம் அருகே நபார்டு மண்வள பாதுகாப்பு திட்ட செயல்பாடுகள் குறித்து தலைமை பொது மேலாளர் நேரில் பார்வையிட்டு,விவசாயிகளிடம் கலந்துரையாடினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

பென்னாகரம் அருகே நபார்டு மண்வள பாதுகாப்பு திட்ட செயல்பாடுகள் குறித்து தலைமை பொது மேலாளர் நேரில் பார்வையிட்டு,விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் வட்டுவனஅள்ளி கிராமத்தில் நபார்டு மண்வள பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மண் அரிமான தடுப்பு,மண் வரப்பு,கல் தடுப்பு,பண்ணை குட்டை செடி நடவு, காலநிலை மாற்ற தகவமைப்பு பயிற்சிகள், வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களான ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியவை விவசாயிகளுக்கு பென்னாகரம் டீப்ஸ் அமைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆனந்த் அவர்கள் வட்டுவனஅள்ளி கிராமத்தில் நபார்டு மண்வள பாதுகாப்பு திட்ட செயல்பாடுகள் குறித்து இன்று நேரில் வருகை தந்து பார்வையிட்டார்,பின்னர் திட்ட செயல்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.


வட்டுவனஅள்ளி  சக்கல்நத்தம் பகுதியில் உள்ள மனுஷி கால்நடை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருமதி ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார், டீப்ஸ் அமைப்பின் தலைவர் திரு மு. சங்கர் அவர்கள் நடைபெற்று வரும் திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆனந்த் அவர்கள் நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் விவசாயிகள் எவ்வாறு பயன்பெற்று வருகின்றனர் என்பதை விவசாயிகளிடம் நேரில் கலந்துரையாடினார், பின்னர் நபார்டு மண்வள பாதுகாப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தபட்டு வருவதை பாராட்டினார். 


இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் தர்மபுரி மாவட்ட வளர்ச்சி அலுவலர் திருமதி. ஷீபா,பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய தலைவர் திருமதி வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டு திட்ட செயல்பாடுகள் குறித்து விவசாயிகள் மத்தியில் விளக்கி பேசினார்கள்,இந்த நிகழ்ச்சியில் வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிராம நீர்செரிவு திட்ட செயல்பாட்டாளர்கள் சக்திவேல் சிவனாதன், மகாலட்சுமி,பத்மா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்,இறுதியாக திருமதி மஞ்சு  நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad