தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (02.01.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வருவாய் துறையின் சார்பில் இருளர் மற்றும் ஆதிதிராவிடர் 99 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாகளை வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பட்டி ஊராட்சி சிலம்பை மலை கிராமத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சிலம்பை மலை கிராம மக்களுடன் உரையாடி சிலம்பை கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், கண்ணூர் வரை வனப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
சிலம்பை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்கள். மேலும், கோட்டப்பட்டி, சிலம்பை மற்றும் ஆவலூர் கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளையும் அதற்காக கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் தரத்தினையும் நேரடியாக ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு சரிவிகித மற்றும் சத்தான உணவு சீரான விகிதத்தில் வழங்க வேண்டும் என அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அரூர் மற்றும் கோட்டப்பட்டி பிசி தெருவில் பதினைந்தாவது நிதி குழு மானிய நிதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆய்வு செய்து, பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட குறைகளை உடனடியாக சரி செய்து, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வருவாய் துறையின் சார்பில் இருளர் மற்றும் ஆதிதிராவிடர் 99 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
தொடர்ந்து, அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வளாமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்கள். பின்னர், தருமபுரி மாவட்டம், அரூர் நூலகத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விருப்ப நிதியிலிருந்து ரூ.44,000/- மதிப்பீட்டில் போட்டித் தேர்வு பயிலுவதற்கான புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சின்னசாமி, வட்டாட்சியர் திரு.ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.இளங்குமரன், திரு.அப்துல் காலம் ஆசத் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக