தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் 09.01.2025 வியாழக்கிழமை அன்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியானது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி. சந்தி தலைமை வகித்தார். நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட அலுவலர் திரு. அப்துல்காதர் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். மோகனசுந்தரம், தருமபுரி வட்டாட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
தருமபுரியில் 4 ஒன்றியங்களில் 15 முதல் 29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கைப்பந்து குழு போட்டி, சிலம்பம் தனிநபர் போட்டி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளும் 15 முதல் 29 வயதிற்கு உட்பட்ட மகளிர்களுக்கு கயிற் இழுக்கும் குழு போட்டி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் தனிநபர் போட்டி, சிலம்பம் தனிநபர் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அதில் குழு போட்டியில் முதலாம் இடத்தில் வெற்றிபெற்றவர்களும், தனிநபர் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டிகளில் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் 4 ஒன்றியங்களில் குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் நேரு யுவ கேந்திரா சார்பில் சிறப்பு விருந்தினர்கள் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் உடற்கல்வி நடுவர்கள் திவ்யதர்ஹினி, சந்தோஷ்குமார், அருள்பிரபு, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர் முத்து, தருமபுரி பாரம்பரிய சிலம்பத்தின் ஆசிரியர் முருகன், பாவெல்ராஜ் நடுவராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அதியமான் டிவியின் இயக்குநர் கபில்தேவ், கக்கன் இளைஞர் நற்பணி சங்கத்தின் துணைத் தலைவர் பரமசிவன், கெளாப்பரை இளைஞர் நற்பணி சங்கத்தின் துணைத்தலைவர் பிரனௌராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.. இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் பசுபதி, சுகந்தி ஆகியோர் செய்திருந்தனர். இறுதியாக நேரு யுவ கேந்திராவின் அலுவலக பணியாளர் ரா. முனியப்பன் நன்றியுரை கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக