பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் - 300-க்கு மேற்பட்டோர் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஜனவரி, 2025

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் - 300-க்கு மேற்பட்டோர் பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சென்னை அண்ணா பல்கலைகழத்தில் நடந்த மாணவியின் பாலியல்  வன்கொடுமையை கண்டித்து தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர்  அவர்களின் தலைமையில் தமிழக அரசை கண்டித்து  கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


ஆர்ப்பாட்டத்திற்க்கு  பாலக்கோடு ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, ஞானவேல். பேரூராட்சி செயலாளர் சி.முருகன் ஆகியோர்  வரவேற்புரை ஆற்றினர். இதில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பி.கே.குமார் கலந்து கொன்டு கண்டன உரை நிகழ்த்தினார்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடந்த வாரம்  அண்ணா பல்கலைகழத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசில் தொடர்ந்து  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருவதை கண்டித்தும்,  பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வலியுத்தியும் , மழை நிவாரண தொகை  உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக அரசை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் உதயகுமார், மாவட்ட பொருளாளர் டாக்டர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம், மற்றும்  மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட கட்சி  தொண்டர்கள் என 300 மேற்பட்டோர்  திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆர்.கே.கணேசன் நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad