தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரை கண்டித்து தருமபுரி மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரை கண்டித்து தருமபுரி மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்.


தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதித்து வரும் தமிழக ஆளுநரின் அத்துமீறும் செயல்பாட்டையும் அதற்கு உடன் தையாக இருக்கும் பாஜகா, அதிமுகவை கண்டித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி தலைமையில் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் தமிழக ஆளுநர், அவருக்கு துணைபோகும் BJP, அதிமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் P பழநியப்பன், தடங்கம் சுப்பிரமணி நகர செயலாளர் நாட்டான் மாது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad