தன்னுடைய கல்லூரி காலம் முதல் தற்போது வரை அவசர கால இரத்ததானம் மற்றும் தட்டணுக்கள் தானம் இணைத்து 100 முறை இரத்ததானம் கொடை அளித்த மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் முனைவர் சதீஸ் குமார் ராஜா அவர்களை பாராட்டிய நல்லம்பள்ளி பூதனஅள்ளி கிராம நிர்வாகிகள் விஸ்வநாதன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, மார்ச் 8, 2005 மகளிர் தினத்தில் முதல் இரத்ததானத்தை கொடை வழங்கி தன் நண்பர்களையும் இரத்ததானம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் சதீஸ் குமார் ராஜா.
இதுவரை 46 முறை இரத்ததானம் 54 முறை தட்டணுக்கள் தானமும் கொடை வழங்கியுள்ளார். இந்த பாராட்டு நிகழ்வின் போது மை தருமபுரி அமைப்பின் செயலாளர் தமிழ்செல்வன், தன்னார்வலர்கள் சையத் ஜாபர், கணேஷ், கோகுல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக