100ஆவது முறையாக இரத்ததானம் கொடை வழங்கிய மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

100ஆவது முறையாக இரத்ததானம் கொடை வழங்கிய மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா.


100ஆவது முறையாக இரத்ததானம் கொடை வழங்கிய மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, இது குறித்து அவர் கூறுகையில்,  இரத்ததானம் நமக்கான சில நிமிடங்கள், அது ஒருவருக்கான வாழ்நாள் நிமிடங்கள். இரத்ததானம் அளிப்பதன் மூலம் பல உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும். 2004 ஆம் ஆண்டு ஈரோடு கலைக்கல்லூரியில் கணித்துறையில் பிடித்த போது எந்த ஒரு விழிப்புணர்வும் இன்றி இரத்ததானத்தை மார்ச் 8, 2005 மகளிர் தினம் முதல் கொடை வழங்கி இன்றுடன் நூறாவது முறையாக இரத்ததானம் கொடையை தருமபுரி அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் வழங்கியுள்ளேன், இதில் 46 முறை இரத்ததானம் 54 முறை தட்டணுக்கள் தானமும் வழங்கியுள்ளேன் என அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் இரத்த வங்கி மருத்துவர் கண்யா பாராட்டி சான்றிதழ் வழங்கினார், மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ், செயலாளர் தமிழ்செல்வன், ராஜ்குமார் மற்றும் மை தருமபுரி அமைப்பின் குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad