தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் (தற்போதைய பெயர் மிஷன் வத்சல்யா) மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) 1 பணியிடம் மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர் (2 பணியிடம்) ஆகிய 3 பதவிகளுக்கு 42 வயதிற்கு உட்பட்ட தகுதிவாய்ந்த ஆண் மற்றும் பெண் நபர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இப்பதவிகளுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்புகள் http://www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை உரிய கல்வி சான்றுகள் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரம், தருமபுரி – 636705 என்ற முகவரிக்கு 17.02.2025 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. (தொலைபேசி எண்.04342 232234) இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக