தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமணையில் சமத்துவ பொங்கல் விழா தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைப்பெற்றது.
மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஒன்றினைந்து மருத்துவமனை வளாகத்தில் வண்ண கோலமிட்டு கரும்பு, வாழை, மஞ்சளுடன் புதுப்பாணையில் பொங்கலிட்டு பொங்கலோ , பொங்கலோ என்று ஆராவரத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்.
அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உரி அடித்தல், கோலப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இவ்விழாவில் மருத்துவர் சசிரேகா, மருத்துவர் ஜெகதீசன், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கரும்பு மற்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக