தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் காவல் நிலைய போலீசார் ஒன்று சேர்ந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து செங்கரும்புடன் பொங்கலோ, பொங்கல் என ஆரவாரம் செய்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்.
அதனை தொடர்ந்து காவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிலைய எழுத்தர் சின்னசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ராஜா, மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக