வாணியாறு அணைக்கட்டில் சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

வாணியாறு அணைக்கட்டில் சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா.


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணைக்கட்டில் சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணைக்கட்டில் சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.01.2025) சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைத்திருநாளில் உழவு தொழிலை போற்றும் விதமாக பொங்கலிட்டு, பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். 


இப்பொங்கல் திருநாளில் சமத்துவம், சகோதரத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் விதமாகவும், பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணைக்கட்டில் சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று இனிப்பு பொங்கல் வைத்து சிறப்புடன் பொங்கல் விழா கொண்டாடினார்.


இப்பொங்கல் விழாவில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணைக்கட்டில் சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, கோலப் போட்டிகள், தப்பாட்டம், ஒயிலாட்டம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.


இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்து மடலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் மகளிர் சுய உதவி குழுவிற்கு வழங்கினார். பின்னர், பொங்கல் திருநாளில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் திருநாள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் கொண்டாடுவதில், எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.லலிதா, வருவாய் கோட்டாட்சியர் திரு.சின்னசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குநர் மரு.சாந்தி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மரிய ரவி ஜெயக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) திரு.செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், உதவி சுற்றுலா அலுவலர் திரு.பா.கதிரேசன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் திருமதி.வள்ளி, உதவி பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம்) திருமதி.கிருபா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad