பாலக்கோடு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஜனவரி, 2025

பாலக்கோடு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை இன்று காலை 11  மணிக்கு சமத்துவ பொங்கல் விழா   நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி. மனோகரன், முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்ச்சியில் போலீசார் காவல் நிலையத்தை வண்ணதோரணங்களாலும், கலர் கலர் பலூன்கள் கட்டி அழகுபடுத்தியும், புதுப் பானையில் பொங்கல் வைத்து செங்கரும்புடன் பொங்கல் சமைத்து   சமத்துவ  பொங்கல் விழா கொண்டாடினார். அதனை தொடர்ந்து காவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டி.எஸ்.பி மனோகரன் அவர்கள் பரிசுகளை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நிலைய எழுத்தர் ரவி, எஸ்.ஐ.கோகுல் மற்றும்  போலீசார்  திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad