தர்மபுரி மாவட்டம் சவுளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. இளங்கோதை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தர்மபுரி வட்டாரக் கல்வி அலுவலர் திரு. நாசர் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார் இந்த 2025 ஆண்டின் முதல் பொங்கல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் உழவர்களைப் போற்ற வேண்டும், மாணவர்களின் வாழ்வு கல்வி பொங்கலோ பொங்கல் என்று பொங்கட்டும், இந்தப் பொங்கல் விழா அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும் என்று வாழ்த்துக்கள் கூறினர்.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் தர்மபுரி வட்டாரக் கல்வி அலுவலர் திரு.நாசர் அவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. இளங்கோதை, திரு.காமராஜ், திரு.இளையராஜா, திருமதி.வினோதினி, திருமதி. சுமதி, உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக